ஒரு மீன் 10,000 ரூபாவா ?? அமோகமாக விற்பனையாகும் கோபியா மீன் !!!

பாம்பன் பகுதியில் மீனவர்கள் வலையில் கோபியா என்ற மீன் ஒன்று வலையில் சிக்கியது. இந்த ஒரு மீன் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பன் தென் கடல் பகுதியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர் வலையில் நேற்று கோபியா மீன் சிக்கியது. இந்த மீனைப் பற்றி மரைக்காயர்பட்டினம் மீன் ஆராய்ச்சியாளர் கூறும் போது,மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கோபியா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து அதற்கு பிறகு கடலில் கூண்டு வைத்து செயற்கை முறையில் வளர்ப்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் கோபியா மீன் குஞ்சுகளை கடலில் விட்டு மீன்வளத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டது. கோபியா மீன்கள் இந்தியா போன்ற வெப்பப் பிரதேச நாடுகளில் மிக வேகமாக வளரும் என்றும் அதிகபட்சம் 60 கிலோ வரையிலும் கூட வளரும் என்றும் கூறினார். இந்த மீன்களுக்கு உலக நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய கோபியா மீனின் எடை 40 கிலோ என்றும் இதனை கிலோ ரூ. 250 வீதம் ரூ.10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கோபியா மீன்களில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த மீன்களை கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் வாங்குகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை