கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்த - மத்திய அரசு முடிவு!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஜனவரி 27) நடைபெற்றது. அதில் கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இது குறித்து, டெல்லியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் பேசிய போது, கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை அதிகரித்து குவின்டால் ஒன்றுக்கு 10,335 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதே போன்று பந்து கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 52 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வருவாய் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை