ஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

ஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நாளை (ஜனவரி - 28) திறக்க தடையில்லை எனவும், அது தொடர்பான வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கிடையாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை யாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேசஷாயி, சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலதா நினைவு இல்லத்தை திறக்க தடையில்லை, ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்