13 வயது சிறுமியை கர்பமாக்கிய எச்.ஐ.வி. பாதித்த இரண்டாவது தந்தை.

13 வயது சிறுமியை கர்பமாக்கிய எச்.ஐ.வி. பாதித்த இரண்டாவது தந்தை.

மதுரையில் 13 வயது சிறுமியை தனது வளர்ப்பு மகளை பாலியல் துன்புறுத்தல் செய்து எச்.ஐ.வி. நோய்தொற்றை பரப்பிய 50 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை குழந்தைகள் நல உறுப்பினர் பி.பாண்டியராஜன் அளித்துள்ள புகாரில், "சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் தாய் 12 ஆண்டுகளுக்கு முன்பு வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இரண்டாவது தந்தை சில மாதங்களுக்கு முன்பு பருவ வயதை அடைந்த அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அச்சிறுமி 3.5 மாத கர்ப்பிணியாகி உள்ளார். இதுமட்டுமில்லாமல், அச்சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்றும் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்." என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரையூர் துணை காவல் கண்காணிப்பாளர், "சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாள். அப்போது தான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் தான் இரண்டாவது தந்தையின் லீலைகள் தெரிய வந்துள்ளது" என கூறினார். இரண்டாவது தந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததால் சிறுமியின் தாய்க்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் எச்.ஐ.வி. தொற்று உறுதியாகி உள்ளது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்