பத்மஸ்ரீ விருது பெற்றது பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: சாலமன் பாப்பையா!!

பத்மஸ்ரீ விருது பெற்றது பட்டிமன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: சாலமன் பாப்பையா!!
தமிழக பட்டிமன்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை பார்க்கிறேன் என பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலேயே சாலமன் பாப்பயை தான். அப்படி 
பட்டிமன்றங்கள் மூலம் புகழ்பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

பட்டிமன்றங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சாலமன் பாப்பையா, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து அவர் பேட்டி அளித்தார், அதில், தமிழக பட்டிமன்றங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை பார்க்கிறேன். என்னுடன் பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக பங்கேற்ற அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். பாமர மக்கள்தான் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்தனர். இதன் மூலம் இந்த விருது அவர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். பட்டிமன்றங்களை வீதிகள் தோறும் கொண்டு சேர்த்தவர் குன்றத்தூர் அடிகளார். அதனை பெரிய அரங்கங்களுக்கு கொண்டு சேர்த்தவர் சா. கணேசன். அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதனை நினைத்து பார்க்கிறேன். இந்த விருது கிடைப்பதற்கு என்னுடன் பயணித்த பேச்சாளர்களும், பட்டிமன்றத்தை ரசித்த அனைத்து மக்களும் முக்கிய காரணமாகும். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்