ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த மூன்று நாள்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%