தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு!!

வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
லட்சத்தீவு, கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றத்தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை(14-01-2021) மற்றும் நாளை மறுநாள்(15-01-2021) தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%