யூடியூப் சேனல்களில் ஆபாசமாக பதிவு செய்த வீடியோக்களை நீக்க உத்தரவு

யூடியூப் சேனல்களில் ஆபாசமாக பதிவு செய்த வீடியோக்களை நீக்க உத்தரவு

யூடியூப் சேனல்களில் ஆபாசமாக இருக்கும் பதிவு செய்த வீடியோக்களை தாமாக முன்வந்து நீக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த நிறுவனர், ஊழியர் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த நிலையில், பல்வேறு யூடியூப் சேனல்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவிடும் வீடியோக்களை நீக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி ஆபாசமான வகையில் பேட்டிகள் எடுத்து யூடியூப்-பில் வீடியோ பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதாவது, ஏற்கனவே பதிவு செய்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும், ஆபாசமான வீடியோக்களை நீக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்