பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்: பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. பெற்றோர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். 

இந்த நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.

* தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

* வகுப்பறைக்கு உள்ளே மற்றும் வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.

* வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

*ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

*10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.

* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.

* மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்