பொங்கல் பண்டிகை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!!

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழர் தைத் திருநாளையொட்டி இன்று தென் மாநிலங்களில் போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் போகி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த சிறப்பு நாள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மங்களகரமான வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகியவற்றை பாதுகாத்திட தீர்மானம் எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பைக் கொண்டுவரட்டும் என்றும், அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ வாழ்த்துவதாக ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%