ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

ஆபாசமாக பேசியதாக தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநீதி மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜலட்சுமி. இவர் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர். வழக்கறிஞர் ராஜலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூக பேசி வருகிறார். 

சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி, "முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார். விட்டால் அவரது சேலைக்குள் புகுந்திருப்பார் என பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெண்களை மிக கேவலமாக சித்தரிப்பதுடன் முதல்வர் நற்புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள உதயநிதி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இதுகுறித்து, உதயநிதி மீது இருபிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசுதல் உள்பட நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்