நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா!!

காஞ்சனா பட நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று(12-01-2021) நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என
பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு