98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.


இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அதை தொடர்ந்து ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் பள்ளி வகுப்புகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டி பாளையம் அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கும் விழா இன்று(13-01-2021) நடந்தது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழகத்தில் முதல்கட்டமாக திறக்கப்படும் 10,12-ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயராக உள்ளன. விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்; 98% மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாணவர்கள் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்து உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்