சசிகலா குறித்து தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது

சசிகலா குறித்து தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலாவை குறித்து தவறாக பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, சென்னையின் பல இடங்களில் அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் நடந்த போராட்டத்துக்குப் பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, "உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல்வரும், துணை முதல்வரும் ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லவில்லை. கட்சியின் தலைவராக இருந்த சசிகலா மரியாதையுடன் போற்றக் கூடியவர். சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா" என தெரிவித்துள்ளார்.

சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் விடுதலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்