கொரோனா தடுப்பூசி: மது அருந்த கூடாது - விஜயபாஸ்கர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் தேதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது.
மேலும் தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%