விவசாயிகள் சுமையை குறைக்கவே புதிய சட்டங்கள்: பிரதமர் மோடியின் சகோதரர்!

விவசாயிகள் சுமையை குறைக்கவே புதிய சட்டங்கள்: பிரதமர் மோடியின் சகோதரர்!
விவசாயிகள் சுமையை குறைக்கவே புதிய சட்டங்கள்: பிரதமர் மோடியின் சகோதரர்!

விவசாயிகள் சுமையை குறைக்கவே புதிய சட்டங்கள்: பிரதமர் மோடியின் சகோதரர்!

''விவசாயிகளின் சுமையை குறைக்கவே புதிய சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்,'' என, மதுரையில் பிரதமர் மோடியின் சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி தெரிவித்தார்.

மதுரையில் நடந்த பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற கூறியதாவது,”சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்த அல்லும், பகலும் மோடி பாடுபடுகிறார். பிரதமரின் திட்டங்களை மக்களிடமிருந்து துாரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. பிரதமரின் திட்டங்களை ஏழைகளிடம் கொண்டு சேர்க்கும் எங்கள் அமைப்பில் 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.மேலும் பல உறுப்பினர்களை சேர்க்கவுள்ளோம்.

ஜன்கல்யாண்கரி யோஜ்னா திட்டத்தை அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்போம். அத்துடன் 40 பிரதான் மந்திரி யோஜ்னா திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். தமிழக மக்கள் குறிப்பாக மதுரை மக்கள் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி. விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது கீழ்மட்டம் வரை செல்வதில்லை. ஒரே நாளில் அடித்தட்டு மக்களிடம் இத்திட்டங்களை கொண்டு போக முடியாது”என்றார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com