பொய் பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.15 லட்சம் அபராதம்…

பொய் பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.15 லட்சம் அபராதம்…

பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.15 லட்சம்  நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்ப்பட்டதையடுத்து சந்தோஷ் குடும்பம் வேறு ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

இதனை தொடர்ந்து தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி அந்த பெண்ணின் தாய் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடைப்படையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். 

இதனை தொடர்ந்து 95 நாட்கள் சிறையில் இருந்த சந்தோஷுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே சந்தோஷுக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனவும் டிஎன் ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டு சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தன் மீது பொய் புகார் அளித்து சிறையில் அடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சந்தோஷ் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து அவருடைய எதிர்காலத்தை பாழாக்கியதால் அவருக்கு 15 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அந்த பொய் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்