திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!

திமுக முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.கே.பி.ராமலிங்கம், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

கடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து பேசினார்.

அப்போது, சென்னைக்கு இன்று வருகை தரும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். இதனால், கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். 

Find Us Hereஇங்கே தேடவும்