பிச்சை எடுப்பது போல் நடித்து வீட்டை நோட்டமிடும் பெண்களால் பரபரப்பு…!

பிச்சை எடுப்பது போல் நடித்து வீட்டை நோட்டமிடும் பெண்களால் பரபரப்பு…!

கோவையில் சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மோகன்நகர், ஓம் சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையுடன் இரண்டு பெண்கள் சந்தேகத்திடமாக சென்று வந்தது தெரியவந்துள்ளது. ஆனால் யாராவது கவனித்தால் மட்டும் பிச்சை எடுப்பது போல் நடித்து, மற்ற நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டதாக தெரிகிறது.


இந்நிலையில் இரண்டு பெண்களும் மோகன்நகர் பகுதியில் அமைந்துள்ள ஒருவர் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த பொருட்களை கவனிப்பது போன்ற காட்சிகள் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருத்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், வீட்டு வாசல் அருகே இருந்த மூட்டைகளை ஒருவர் திறந்து பார்க்க, மற்றொரு பெண் ஆள் நடமாட்டத்தை கண்காணித்துள்ளார்.

இதனிடையே சந்தேகத்திடமாக சுற்றி திரியும் மர்ம பெண்களை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்