பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் திடீர் திருப்பம்..!

பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் திடீர் திருப்பம்..!

பல பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து ஏமாற்றிய காதல் மன்னன் காசியின் வழக்கில் திடீர் திருப்பமாக, தடயங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரும் குற்றவாளி பட்டியலில் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி. 27 வயதான இவர், சமூக வலைத்தளம் மூலம் பெண்களிடம் பழகி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதை வைத்து, பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பல பெண்ளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு, போக்சோ மற்றும் பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

காசி வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காசி மீது பதியப்பட்ட நான்கு பெண்கள் ஏமாற்று வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் தற்போது சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை போலீசார் மீண்டும் மீட்டுள்ளனர். மகனை காப்பாற்ற லேப்டாப்பில் இருந்த ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை அழித்த அவரது தந்தை தங்கபாண்டியன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல பெண்களை சீரழித்த காசி வழக்கில், திடீர் திருப்பமாக தடயங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்