சென்னை மெட்ரோ.. மகளிருக்கான ஸ்பெஷல் ரயில் பெட்டி...!

சென்னை மெட்ரோ.. மகளிருக்கான ஸ்பெஷல் ரயில் பெட்டி...!

மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 23ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. 

இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது மகளிர் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிர் பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழு நேரமும் முழுமையாக கண்காணித்தல், தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்க தடை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    64.44%
  • இல்லை
    27.81%
  • யோசிக்கலாம்
    4.33%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்