நவம்பர் 23ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

நவம்பர் 23ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்