கோவையில் அரியர் எழுத வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!

கோவையில் அரியர் எழுத வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வு எழுத தன் தாயுடன் கல்லூரிக்கு சென்றுள்ளார். மேலும் நவீன்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று நாட்கள் நவீனுடன் அவரது தாயார் தங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் நேற்று காலை நவீனின் தாய் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில், மாலை நவீனுக்கு தொலைப்பேசியில் அழைத்தும், நீண்ட நேரம் எடுக்காத்தால் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு பெற்றோர் தகவல் கூறியுள்ளனர். அறைக்குச் சென்று பார்த்த போது நவீன்குமார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்