பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 40,500 ரொக்கப்பணம் பறிமுதல்..!

பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 40,500 ரொக்கப்பணம் பறிமுதல்..!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தின் அலுவலக சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தல், திருமண பதிவு மற்றும் நில ஆவணங்கள் தொடர்பாக வில்லங்க சான்றிதழ்கள் பெற பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி டிஎஸ்பி மனோகரன் தலைமையில் அதிரடியாக திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சார்பதிவாளர், உதவியாளர், பத்திர எழுத்தாளர், மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில் சார்பதிவாளர் ஜெயஷீலராணி உட்பட சக பணியாளர்களிடமிருந்து கணக்கில் வராத 40,500 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்