பொள்ளாச்சியில் முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம்…!

பொள்ளாச்சியில் முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம்…!

பொள்ளாச்சி தொழிற்பேட்டை நகர்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி. இவர் திருமணமாகி இரண்டு வருடத்தில் தன் கணவனை இழந்தவர். இவருக்கு 30 வயது ஆகிய நிலையில் தனது 13 வயது மகனுடன் பொள்ளச்சியில் வசித்து வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தின் என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.


அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து, புவனேஸ்வரி காஜாமொய்தினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறப்பட்டதையடுத்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூலில் காதலித்து வந்த நபர் தொலைபேசியில் பேசவில்லை என்பதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்