அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.