தமிழ்நாடு
தீபாவளியன்று உயிரிழந்த மதுரை தீயணைப்பு வீரர்களுக்கு ரூபாய் 25 லட்சம் உதவித்தொகை..!
தீபாவளியன்று உயிரிழந்த மதுரை தீயணைப்பு வீரர்களுக்கு ரூபாய் 25 லட்சம் உதவித்தொகை..!
தீபாவளியன்று மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க முற்பட்டு உயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூபாய்25லட்சம் வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
தீபாவளியான நேற்று இரவு மதுரையின் ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு துறைக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள் தீயை அணைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக 2 தீயணைப்பு வீர்ர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.