10 ரூபாய்க்கு ஒரு தட்டு பிரியாணி. குவிந்த கூட்டம். உரிமையாளரை கைது செய்த போலீஸ்.

10 ரூபாய்க்கு ஒரு தட்டு பிரியாணி. குவிந்த கூட்டம். உரிமையாளரை கைது செய்த போலீஸ்.

அருப்புக்கோட்டையில் ஜாகிர் உசேன் என்பவர் புதிய பிரியாணி கடை ஒன்றை திறந்துள்ளார். இதன் சிறப்பம்சமாக ஒரு தட்டு பிரியாணியின் விலை ரூபாய் பத்து என்று அறிவித்துள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் கடையின் முன் முக கவசம் அணியாமலும், எந்த வித சமூக இடைவெளியை பின்பற்றாமலும் திரளாக கூடியுள்ளனர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கூட்டத்தை சேர்த்ததால் கடையின் உரிமையாளர் ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டர். மேலும் மீதம் உள்ள பிரியாணியை போலீசார் ஏழை எளிய மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை  அளித்து ஜாகிர் உசேன் விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்று பரவும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்