கிரில் கேட்டை உடைத்து கொள்ளை.. அரை கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்..!

கிரில் கேட்டை உடைத்து கொள்ளை.. அரை கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்..!

திருப்போரூர் அடுத்துள்ள செம்பாக்கம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி காவேரி. நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென காவேரி எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

அப்போது, பின்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன்  நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, ராஜசேகரன் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை  தேடி வருகின்றனர்.

இதேபோல், வடக்கு மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கங்கையம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை  செலுத்தும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்