மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

பாடம் கற்றுக்கொடுப்பதாக கூறி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

செங்கல்பட்டு அடுத்துள்ள பாலூர் மேலசேரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா என்ற பெண்மணிக்கு இரு மகன்கள் உள்ளனர். காஞ்சனாவின் ஒரு மகன், செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது, ஆனால், 9ஆம் வகுப்பு பயிலும் மகன் சரியாக படிக்க முடியாமல் அவதியுற்றுள்ளார். 

இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் காஞ்சனாவின் வீட்டுக்கு சென்ற கார்த்திக், எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தால் பாடம் நடத்துகிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தாய், தனது மகனை படிக்க அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஆசிரியர் கார்த்திக், 9ஆம் வகுப்பு மாணவனுக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை செல்போனில் வீடியோ எடுத்து மாணவனை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில  நாட்களாக மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அந்த தாய் மகனிடம் விசாரித்தபோது, ஆசிரியர் கார்த்திக் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா, உடனடியாக கார்த்திக் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் குளியலறையில் இருந்துள்ளார். அவரது செல்போனில் இருந்த வீடியோ காட்சிகளை தனது செல்போனுக்கு அனுப்பி வைத்த பிறகு, அந்த காட்சியை கார்த்திக்  செல்போனில் இருந்து அழித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பாலூர் காவல் நிலையத்தில், வீடியோ ஆதாரத்துடன் ஆசிரியர் கார்த்திக் மீது அவர் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தனியார்  பள்ளி ஆசிரியர் கார்த்திக்கை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்