புல்லட் பைக்குகளை மட்டும் ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்…

புல்லட் பைக்குகளை மட்டும் ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்…

சென்னையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த ராயல் என்பீல்டு பைக் திருட்டில் ஈடுப்பட்ட கும்பலை ஒரே ஆளாக சென்னை காவலர் சரவண் கண்டுபிடித்துள்ளார்.

சென்னையில் தொடர்ச்சியாக புல்லட் பைக்குகள் திருடுபோவதாக போலீஸாருக்கு புகார் வந்தன. இதனையடுத்து சம்பவ இடங்களின் சிசிடிவி கேமராகளை வைத்து விசாரணை செய்ததில், ஜமாலுதீன் என்பவர் இந்த திருட்டில் ஈடுப்பட்டார் என்று தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை செய்த போது அவரது நண்பர்களான சையத் இப்ராகிம், அமீர் அகியோருடன் சேர்ந்து, தொடர்ச்சியாக புல்லட் பைக்குகளை திருடி வாட்ஸ் அப் குழு மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 26 புல்லட் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இந்த பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவல் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பைக்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்