தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை..!

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.. அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், பள்ளிகள் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். 
முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது. முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்