ரூ.10-க்கு பிரியாணி… கொரோனாவை மறந்து குவிந்த மக்கள் கூட்டம்…

ரூ.10-க்கு பிரியாணி… கொரோனாவை மறந்து குவிந்த மக்கள் கூட்டம்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ.10க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டத்தை தொடர்ந்து கொரோனாவையும் மறந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரியாணி கடையில் வாடிக்கையாளரை கவரும் நோக்கத்தில் ரூ.10 நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. 

இதனையடுத்து ரூ.10 நாணயத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிரியாணிக்காக கொரோனா அச்சுறுத்தலையும் மறந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் குவிந்ததையடுத்து போலீஸார் சம்பவம் இடத்திற்கு வந்து பொதுமக்களை விரட்டினர். இதனையடுத்து பிரியானி விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படி தங்கள் வியாபாரித்திற்காக இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடும் வியாபாரிகளுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று பலதரப்பில் கருத்து வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்