டிஎன்பிஎஸ்சி முறைகேடு..மேலும் 26 பேர் கைது..!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு: மேலும் 26 பேரை கைது செய்தது சிபிசிஐடி..!
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பணம் கொடுத்து பலர் வெற்றிபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன் உட்பட 32 பேரை கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் நடத்திய விசாரணையில், பால்டெக்னிக் தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி,  ஓம்காந்தன், ஜெயக்குமார் கூட்டணி மெகா மோசடியாக 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேர்வில் வெற்றி பெற வைத்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார்  கடந்த பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 6 மாதங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக உள்துறை அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், முறைகேட்டில் தொடர்புடையதாக 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் அக்டோபர் 10ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்