கொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவு..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.. சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், காவலர்கள், துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து கொரோனா பேரிடரின்போது சிறப்பாக செயல்பட்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கொரோனா சிகிச்சை பணியில் இருந்தபோது, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனுக்கு நிகரற்ற சேவைக்கான விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இரண்டு பேர், திரைத்துறையைச் சேர்ந்த வடிவுக்கரசி, ரோபோ சங்கர், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. 
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருகிறது" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.7%
  • இல்லை
    27.95%
  • யோசிக்கலாம்
    4.74%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்