ஒரு ரூபாய் காணிக்கைக்கு மொத்த உண்டியலும் அபேஸ்… வைரலாகும் சிசிடிவி வீடியோ

ஒரு ரூபாய் காணிக்கைக்கு மொத்த உண்டியலும் அபேஸ்… வைரலாகும் சிசிடிவி வீடியோ

ஒரு திருடன் ஒரு ரூபாய் காணிக்கையை செலுத்திவிட்டு மொத்த உண்டியல் பணத்தையும் திருடி சென்ற சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை திருவான்மியூரில் உள்ள புகழ்பெற்ற மருந்தீஸ்வர் சிவன் கோயில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அரசு உத்தரவிட்ட பிறகு கோயிலில் முறைப்படி பூசைகள் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட வேளையில் பூட்டிவிட்டு நடை சாத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கோயிலை பூட்டிவிட்டு அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு அர்ச்சகர்கள் சென்றனர். இதனையடுத்து ஒரு திருடன் கோயிலுக்குள் சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடியுள்ளார்.

இதனையடுத்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவியை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிசிடிவி காட்சியில் அந்த திருடன் திருடுவதற்கு முன் தான் செய்யும் காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று சாமியை வேண்டிவிட்டு ஒரு ரூபாய் காணிக்கையை செலுத்தி விட்டு பின்னர் உண்டியல் காணிக்கையை திருடியுள்ளார். இது அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருடுபோன இரண்டு கோயில் உண்டியல்களில் சுமார் ஒரு லட்சம் பணம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்