அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா..!

புதுவையில் அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று..!
புதுவையில் அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, புதுவையில் அக்டோபர்  8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் 10, 12ஆம் வகுப்புகளும், 12ஆதேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களும் சந்தேகம் கேட்க பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவானந்தம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதேபோல், சுசீலாபாய் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும், வாதானூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் இருந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்