அரசியல் தலையீடு, எதிர்ப்புகள் முறையற்றது

கலைத்துறையில் அரசியல் தலையீடு, எதிர்ப்புகள் முறையற்றது.. சரத்குமார் கருத்து..!
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி 800 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், 800 என்ற திரைப்படம் குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். "காந்தி படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர். கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது. ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக்கூடாதே தவிர சாதனையாளரின் சரித்திரத்தை அறிவதில் தவறில்லை" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்