கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியது கேரளா..!

கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியது கேரளா..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,389 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,79,191ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 57 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 7,283ஆக பதிவாகியுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டை நேற்று பின்னுக்கு தள்ளியுள்ளது. 
கேரளாவில் இதுவரை 3.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,113 பேர் உயிரிழந்துள்ளனர். பல நாட்களாக தொற்று குறைந்த நிலையில், கேரளாவில் சமீப நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்