இறப்பதற்கு முன்பே பிரிசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் பலி!

இறப்பதற்கு முன்பே பிரிசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்..!

இறந்துவிட்டதாக கருதி, உயிருடன் இருந்த அண்ணனை பிரிசர் பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியகுமார். 80 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவரது தம்பி சரவணன், பிரிசர் பெட்டியை வரவழைத்து பாலசுப்பிரமணியகுமார் இறப்பதற்கு முன்பே அந்த பாக்ஸில் படுக்க வைத்தார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார், முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இது தொடர்பாக விசாரித்த சூரமங்கலம் போலீசார், முதியவரின் தம்பி சரவணன் மீது அஜாக்கிரதையாக நடத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், முதியவர் பிரிசர் பாக்ஸில் வைக்கப்பட்டது குறித்து சேலம் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மலர்விழி விசாரணை நடத்தினார். அப்போது முதியவர் இறந்துவிட்டதாக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் இறப்புச் சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. இதனால் முதியவர் இறந்துவிடுவார் என கருதிய சரவணன் பிரிசர் பெட்டியை வரவழைத்து அதில் முதியவரை படுக்க வைத்தது தெரியவந்தது. தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே, இன்று அதிகாலை முதியவர் பாலசுப்பிரமணியகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்