இறப்பதற்கு முன்பே முதியவரை சவப்பெட்டியில் வைக்கப்பட்ட அவலம்…

இறப்பதற்கு முன்பே முதியவரை சவப்பெட்டியில் வைக்கப்பட்ட அவலம்…

சேலத்தில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குள்ரூட்டி பெட்டியில் அவரது குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 74 வயது முதியவர் பாலசுப்ரமணியம், தனது சகோதரர் சரவணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த முதியவர் இறந்து விட்டதாக அவரை குளிர் பெட்டியில் வைத்துள்ளனர். அந்த குளிர்சாத பெட்டியை கொடுத்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மறுதினம் அதனை திரும்ப பெற பெற்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

காரணம் அதில் படுக்க வைத்திருந்த பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டு உயிருடன் இருந்தார். அவரது கை கால்கள் கட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து பாலசுப்ரமணியத்தின் சகோதரர் சரவணனிடன் கேட்டபோது, “அண்ணன் இறந்து விட்டதாக மருத்துவர் கூறிவிட்டார். அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தங்களுடைய செல்போனில் பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். இதனையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீஸார் விரைந்து வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஐஸ் பெட்டியில் 24 மணி நேரம் உயிருடன் ஆச்சரியமான விஷயம் என்று கூறினர். 

இதுகுறித்து போலீஸார் குடும்பத்தினரை விசாரணை செய்ததில் மருத்துவர் அண்ணன் இறந்து விட்டார் என்று கூறியதனாலேயே அவரை ஐஸ் பெட்டியில் வைத்ததாக தெரிவித்தனர்.

உயிருடன் இருந்த ஒருவரை ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்