சொத்து வரி தொடர்பான வழக்கில் ரஜினிகாந்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!

சொத்து வரி தொடர்பான வழக்கில் ரஜினிகாந்துக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை..!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் எச்சரிக்கையை தொடர்ந்து, ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி செலுத்தக்கோரி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. 

இதையடுத்து, சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி, ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளர் நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மத்திய- மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். 

இந்த நிலையில், மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக இன்றே மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்