தமிழக மாணவர்களின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்

தமிழக மாணவர்களின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்..! நாசா அறிவிப்பு..!!

தமிழக மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தவுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்னான், கேசவன் மற்றும் அருண் ஆகிய மூன்று மாணவர்களால் தயாரிக்கப்பட்ட "இந்தியன் சாட்" என பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தவுள்ளது.

செயற்கைகோளை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கரூரைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்களுக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பாராட்டு தெரிவித்துள்ளது. கியூப் இன் பேஸ் என்ற நிறுவனம் நாசாவுடன் இணைந்து ஆண்டுதோறும் 11 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு போட்டித் தேர்வை நடத்தி வருகிறது.  

இந்த நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நாகம்பள்ளியை சேர்ந்தவர் கேசவன் (18). தாந்தோணிமலையை சேர்ந்தவர் அட்னன் (18). கரூர் தென்னிலையை சேர்ந்தவர் அருண் (19). கேசவன் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும், அட்னன், அருண் ஆகிய இருவரும் கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர். 

இவர்கள் மூவரும் இணைந்து கண்டுபிடித்த செயற்கைக்கோளை கியூப் இன் பேஸ் நடத்திய போட்டித் தேர்வில் சமர்ப்பித்தனர். அதில், 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். 

அந்த போட்டித் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் கண்டுபிடித்த 3 சென்டி மீட்டர் 64 கிராம் எடையுள்ள செயற்கைகோள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஜூன் 20 முதல் 25ஆம் தேதிக்குள் நாசாவின் விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்