பாடும் நிலா மறைந்தது.. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

பாடும் நிலா மறைந்தது.. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமானதை அடுத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் கவலைக்கிடமாக இருப்பதாக எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 
இந்த நிலையில், கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினர் இடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1946ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்