போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எம்.ஜி.எம் மருத்துவமனை..!

போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எம்.ஜி.எம் மருத்துவமனை..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுள்ளனர். 

சென்னை சூளைமேட்டில் உள்ள MGM மருத்துவமனை வளாகத்துக்குள்ளும், வெளியேயேயும் ஆயுதப்படை காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இளையராஜா, பாரதிராஜா என திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். எம்.ஜி.எம் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்