தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம்


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். குளச்சல் முதல் தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை கடல் அலைகள் 3.6 மீட்டர் உயரம் வரை எழும். அதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் மீனவர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்