நடிகை மீரா மிதுன் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு

நடிகை மீரா மிதுன் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு..!

நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிஸ் சௌத் இந்திய அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மெட்டாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீரா மிதுன் மீது சென்னை மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், நடிகை மீரா மிதுன் தன் மீது அவதூறு பரப்பி வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், பிறருக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது சென்னை மகாகவி பாரதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்