ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது..!

பள்ளி மாணவி தற்கொலையில் திருப்பம்.. ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது..!

பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆபாச படம் எடுத்து மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் வசித்து வந்த 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி, ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தரமணி போலீசார் விசாரித்து வந்தனர்.

பள்ளி மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், மாணவியின் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த குணசீலன் என்பவரது செல்போன் என்பது தெரியவந்தது. ஆனால், மாணவி தற்கொலைக்கு பிறகு வீட்டை காலி செய்துவிட்டு பெருங்குடி கல்லுக்குட்டை பகுதிக்கு குணசீலன் சென்றுவிட்டதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த குணசீலன் வால்பாறையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

"பள்ளி மாணவிக்கு டியூஷன் எடுத்து வந்தேன். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன். மாணவியை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை மாணவியிடம் காட்டி ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆபாச படம், வீடியோக்களை இணைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினேன். 

பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக மாணவி கூறியதால், மாணவியின் தாயார் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினேன். இந்த குறுஞ்செய்தியை பார்த்த மாணவி, அதனை அழித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்" என குணசீலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்