எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும்

எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவீட்..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.,பாலசுப்ரமணியத்துக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். 

இதன் காரணமாக, உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணம் அடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் காண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், "பாலசுப்ரமணியம் அனைத்து வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல் நலம் பெற வேண்டும் என எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி. லவ் யூ சார்" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்