வேளாண் மசோதாவிற்கு எதிராக இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..!

வேளாண் மசோதாவிற்கு எதிராக இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..!


மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக,விருதுநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்,சேத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில்  சேத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன்,கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர். மேலும் பொதுக்குழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், வட்டார தலைவர்கள் ரெங்கசாமி,லட்சுமணன்,மேற்கு மாவட்ட சேவாதள தலைவர் பச்சையாத்தன்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவிந்தன்,வக்கீல் வெங்கடேஷ்,ஜனா உட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்